
Kalaignar TV – Pongal Spl. Events stills & News

கலைஞர் தொலைக்காட்சியின் பொங்கல் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்
பொங்கல் திருநாளை முன்னிட்டு கலைஞர் தொலைக்காட்சியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய அதிரடி திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது.
அதன்படி, தை 1 தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு காலை 9 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் “சிறப்பு பட்டிமன்றமும்”, 10.30 மணிக்கு “சூப்பர் சூரி” தலைப்பில், காமெடி நடிகர் சூரியுடன் பொங்கல் கொண்டாட்டமும், பிற்பகல் 1.30 மணிக்கு சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, யோகி பாபு, விவேக் நடிப்பில் காமெடியும், திகிலும் கலந்த “அரண்மனை 3” சிறப்பு திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.
தை 2, திருவள்ளுவர் தினமான மாட்டு பொங்கலன்று, காலை 10 மணிக்கு மதுரை முத்து தலைமையில் “சிரிப்பு பட்டிமன்றமும்”, 11 மணிக்கு நடிகை பிரியா பவானி ஷங்கர் பங்கேற்கும் “பிரியமானவளே பிரியா” என்கிற சிறப்பு நிகழ்ச்சியும், பிற்பகல் 12 மணிக்கு “கற்றது சமையல்” குழுவினரின் பொங்கல் கொண்டாட்டமும், பிற்பகல் 1.30 மணிக்கு யோகி பாபுவின் கலக்கலான காமெடியில் “பேய் மாமா” சிறப்பு திரைப்படமும், மாலை 6.30 மணிக்கு சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் நடிப்பில் “ஜெய்பீம்” புத்தம் புதிய சூப்பர்ஹிட் திரைப்படமும் ஒளிபரப்பாகிறது.
தை 3-ஆம் நாள் காணும் பொங்கலன்று, மதியம் 1.30 மணிக்கு பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, ஜான் கொக்கன், ஜான் விஜய் நடிப்பில் “சார்பட்டா பரம்பரை” சூப்பர்ஹிட் திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.